திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உகந்தான்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்த மாரிகண்ணு (45). என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் (14.08.2024) அன்று இரவு வேலைகளை முடித்துவிட்டு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலை வந்து பார்த்த போது கிணற்றுக்குள் இருந்த நீர் முழ்கி மோட்டாரை காணவில்லை. இது குறித்து மாரிகண்ணு சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், சாவித்திரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உகந்தான்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (19). மற்றும் கண்டிகைபேரி, இலந்தைகுளம், வடக்கு தெருவை சேர்ந்த சூர்யா (21). ஆகிய இருவரும் சேர்ந்து நீர் முழ்கி மோட்டாரை திருடியது தெரியவந்ததை அடுத்து உதவி ஆய்வாளர் சாவித்திரி, ஆகாஷ் மற்றும் சூர்யாவை (10.09.2024) கைது செய்து அவர்களிடமிருந்து நீர் முழ்கி மோட்டாரை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்