திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவகன்குளத்தைச் சேர்ந்த தமிழரசன் 39, என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.
இவர் 09.01.2022ம் தேதி அன்று சேவகன் குளத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும்போது கிணற்றின் அருகில் உள்ள அறை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் மோட்டாரை திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக தமிழரசன் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளர் திரு.ஆழ்வார், அவர்கள் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்தின் பேரில் சேவகன்குளத்தை சேர்ந்த கண்ணன் 26, என்பவரை விசாரணை செய்ததில் மோட்டார்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் காவல்துறையினர் விசாரணையில் கேசவன்குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் 29, மற்றும் கல்லத்தியை சேர்ந்த மகேஷ் 32, ஆகியோர் சேர்ந்து விஜயநாராயணம், மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி ஆகிய பகுதிகளில் மோட்டார்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அவர்களிடமிருந்து 14 மோட்டார்களையும் 1LED Tv யை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த மூன்றடைப்பு காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் இ.கா.ப, அவர்கள் வெகுவாக பாராட்டினார்