தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து அதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூபாய் 2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான தந்தை மற்றும் மகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான எட்டையபுரம் புங்கவர்த்தனம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (63). மற்றும் அவரது மகன் அய்யாதுரை (27). ஆகிய இருவரையும் (06.02.2025) மாவட்ட குற்றப்பிரிவு-I போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.