திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணம் 4.69 கோடி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வரி வசூல் மைய இளநிலை உதவியாளர் சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு DSP. குமரேசன் தலைமையிலான போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கி மோசடி செய்த பணத்தில் சரவணனிடம் தலா ரூ.30 லட்சம் பெற்றதாக திண்டுக்கல்லை சேர்ந்த இளஞ்செழியன்(35). சாணார்பட்டியை சேர்ந்த முரளி (41). ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் , முரளி மோசடி பணத்தில் சொத்துக்களை வாங்கி உள்ளனர். அவற்றை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா