திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாசாலை ரோட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்துபவர் பிருந்தா(34). இவருடன் பங்குதாரராக ராஜாசெல்வம் சேர்ந்தார். 2022ல் பிருந்தாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. சூப்பர் மார்க்கெட் கணக்குகளை ராஜாசெல்வம் கவனித்தார். அப்போது ராஜாசெல்வம், அவரது தம்பி ராஜாபிரசாத், சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய அதே பகுதியை சேர்ந்த பெண் ஊழியர் ராமதிலகம், அவரது கணவர் மணிகண்டராஜ், நண்பர் சபரீஷ்குமார் ஆகியோர் போலி ஆவணங்களை தயாரித்து வங்கி ‘செக்’ உள்ளிட்டவற்றில் பிருந்தாவை போல் போலியாக கையெழுத்திட்டு அவருக்கு தெரியாமல் ரூ.1.20 கோடி மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து பிருந்தா திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கைக்கு உத்தரவிட்டதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் ராஜாசெல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா