திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு மானூர் காவல் நிலைய சரகம் தெற்கு வாகை குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் 57, என்பவர் அவரது நகைகளை ரஸ்தாவை சேர்ந்த சண்முகம் 42 என்பவரது பைனான்ஸ் கம்பெனியில் அடகு வைத்து உள்ளார். மேற்படி 2018-ம் வருடம் ராஜேந்திரன் நகைகளை திருப்புவதற்கு ரூ.45 ஆயிரத்தை சண்முகத்திடம் கொடுத்துள்ளார். சண்முகம் பணத்தை பெற்றுக்கொண்டு நகையை திருப்பி கொடுக்காமலும் மற்றும் சண்முகம் தனது மனைவி சுதா 37. இருவரும் ராஜேந்திரனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சண்முகம் மற்றும் சுதாவை கைது செய்தனர்.
இவ்வழக்கு திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 21.02.2022 வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி திருமதி. விஜயலெட்சுமி அவர்கள் குற்றவாளிகள் சண்முகம் மற்றும் சுதாவிற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.