திருநெல்வேலி: திருநெல்வேலி சேரன்மகாதேவி கூனியூர், முதல் தெருவை சேர்ந்த பாண்டியன் (33). சென்னையில் பணிபுரிந்து வருவதால் வீட்டை பராமரிப்பதற்காக தனது அக்காவின் கணவரான கூனியூர், மேல வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற ரமேஷிடம் (41). ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். (10.06.2024) அன்று பாண்டியன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. இது குறித்து பாண்டியன் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், அன்ன ஜோதி வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிய ராமகிருஷ்ணன் என்ற ரமேஷை (12.05.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத