மதுரை: மதுரை கனகவேல் காலணியில் இயங்கி வரும்good shepherd மேல்நிலைப்பள்ளி 41 வது விளையாட்டு தின நிகழ்வுஇன்று (2/12/2024)காலை 9:00 மணியளவில் தொடங்கி மதியம் 3:00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகMr: S KUMARAVEL Bsc.. MA. (Bh.D) Addnl superintendent of police (Redt..)அவர்கள் கலந்துகொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மேலும் ஓட்டப்பந்தயம், தடகளபோட்டி, நீளம் தாண்டுதல், சிலம்பாட்டம், யோகாசனம், கராத்தே சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் என்று நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்தி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்