திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் எல்லை பகுதியான பழனி சாலை ராமயம்பட்டி அருகே உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 20 வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வரவேற்புரை பள்ளியின் முதல்வர் சிஸ்டர். அமலா அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் ,உதவி கண்காணிப்பாளர் திரு.அருண் கபிலன் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலக சிறப்பு ஆய்வாளர் திரு.பாலகுரு அவர்கள், இந்திய ராணுவ படையின் ஓய்வு ஓய்வு பெற்ற கர்ணள் திரு.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இப்பள்ளியின் பெருமை சேர்க்கும் வகையில் கடந்த ஆண்டு பள்ளியில்10 முதல் 12 வகுப்புகளில் அரசு தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட முக்கிய நிகழ்வாக மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றதை கண்டு மகிழ மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.