மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.02.2026) ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்தனர். அதில், மேலூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (21), விக்ரம் (21), சரவணன் (21)
ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் வழங்கலாம். தகவல் அளிப்போரின் விபரம் ரகசியமாக காக்கப்படும் என்றும், தகவலின் அடிப்படையில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
















