திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள சுஸ்லான் குளோபல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் குமரன் (45). என்பவரின் கட்டுப்பாட்டின் கீழ் ராதாபுரம் பகுதியில் பணிபுரியும் பாதுகாப்பு அலுவலரான சந்திப்பு, சிந்துபூந்துறையை சேர்ந்த சண்முகசாமி மகன் ராஜதுரை (43). என்பவரிடம் வேலையை சரிவர செய்யாததற்கான விளக்கத்தை அளிக்குமாறு கேட்டதன் காரணமாக (10.09.2024)-ஆம் தேதி, குமரன் அலுவலகத்தில் பணியில் இருந்த போது அறைக்குள் வந்த ராஜதுரை அசிங்கமாக பேசி, தலையில் கையால் தாக்கியதாக (13.09.2024)-ஆம் தேதி குமரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர், கார்த்திகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்