மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது கிராம சபை கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுமக்களிடம் அறிக்கை வாசித்தார்.
இதில் வாடிப்பட்டி யூனியன் அலுவலர்கள் மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறப்பட்டது முக்கியமாக தெரு விளக்குகள் கழிவுநீர் கால்வாய் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் மகளிர் உரிமை தொகைமனுக்கள் பெறப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை மூலம் வாசித்தார் கூட்டத்தில் தமிழக முதல்வர் நேற்று துப்புரவு பணியாளர்களுக்கு அறிவித்த சலுகைகளுக்காக தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும்நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் பொது மக்களுடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி