திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் மருதம் புத்தூரைச் சேர்ந்த ராமையா (35/18) என்பவரிடம் அதே ஊரைச் அருள்ராஜ் (46). என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததால் (05.04.2018) அன்று ராமையாவை அருள்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான தாமரை செல்வன் (29). சுந்தர் (27).கண்ணன் (33). ரவி இசக்கி (38). ரமேஷ் (34). ஆகியோர் அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கு விசாரணை திருநெல்வேலி நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் அருள்ராஜ், தாமரை செல்வன், சுந்தர் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து, கண்ணன், ரவி இசக்கி, ரமேஷ் ஆகிய மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த முக்கூடல் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்