திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி திரு ஆவினன்குடி கோவிலில் மணப்பாறையை சேர்ந்த பக்தர் ஒருவர், சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது, கழுத்தில் அணிந்திருந்த, மூன்றரை பவுன் தங்க செயினை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பக்தர் அடிவார காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் உடனடியாக, சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், தங்க செயின் கீழே கிடந்ததாக கூறி ,மற்றொரு பக்தர் கோவில் கண்காணிப்பாளரிடம் கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து, செயின் உரிமையாளர், ஆவணங்களை காண்பித்து வாங்கிச் சென்றனர். உடனடியாக, நேரில் வந்து செயினை மீட்டு கொடுத்த காவல் துறைக்கு பெண் பக்தர் நன்றியை தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா