திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பெருங்காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த (60). வயது மூதாட்டி நேற்று தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை வன்புணர்வு செய்துவிட்டு அவரிடமிருந்து சுமார் இரண்டு பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு
வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை கைது செய்தனர். இக்குற்ற சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்த வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்