திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் இ.பி.காலனியை சேர்ந்த அர்ச்சுணன் மனைவி ருக்குமணி(72). கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த 6ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கொலை செய்து, அவா் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து அருகில் குடியிருந்து வரும் மகன் பாலசுந்தரம் அளித்த புகாரின் பேரில், வள்ளியூர் காவல் ஆய்வாளர் நவீன் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் திருநங்கை அல்லது பெண் வேடமிட்டவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதாம். அதனடிப்படையில், ருக்குமணியின் வீட்டில் பராமரிப்பு பணிக்காக வந்த களக்காடு சிதம்பராபுரத்தைச் சேர்ந்த வீரவேலின் மகன் விஜய்(28). என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பெண்வேடமிட்டு ருக்குமணியை கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து நகைகளை மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்