திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஏ.ஆர்.ஜி நகரைச் சேர்ந்தவர் ரங்கநாயகி 65. இவர் வீட்டில் இரவு தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த 2 நபர்கள் அதில் ஒருவர் ரங்கநாயகி முகத்தில் தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கம் அடைந்தார்.
பின்னர் சுயநினைவு வந்து ரங்கநாயகி கண் விழித்துப் பார்த்தபோது தான் அணிந்திருந்த 3.5 பவுன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். ரங்கநாயகி உடுமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.