திண்டுக்கல்: திருப்பத்தூரை சேர்ந்த பாப்பா(60). என்பவர் தாராபுரம் செல்வதற்காக திருப்பத்தூரில் இருந்து பேருந்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்தார். பிறகு அப்பகுதியில் உள்ள இனிப்பகத்தில் இனிப்புகள் வாங்க சென்ற போது சுமார் (65 ).வயது மதிக்கத்தக்க முதியவர் நயமாக பேசி ஏமாற்றி நூதன முறையில் பாப்பா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை திருடி சென்றார். இது குறித்து பாப்பா திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா