திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்சுமி ( 87). இவா் சனிக்கிழமை மாலையில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பொழுது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மா்மநபா்கள், மூதாட்டி தாக்கி விட்டு அவா் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், 3 தனிப்படை அமைக்கப்பட்டு மா்மநபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்