தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பெற்று செல்ல வேண்டும் என்று தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி முழு வீச்சில் பாதுகாப்பு பணியில் தேனி மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .