திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 23.01.2022 தமிழகத்தில் ஒமைக்ரான், கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு 23.01.2022ம் தேதி ஞாயிற்றுகிழமை தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப.,அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் அவர்கள் இருப்பிடம் செல்ல ஆட்டோ, வாடகை டாக்ஸி, கால் டாக்ஸி, போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள உத்திரவிட்டுள்ளது.
இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ரயில் நிலையங்களில் வரும் பொதுமக்களுக்கு ஆட்டோ வசதிகள் ஏற்பாடுகளை அமைத்து கொடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். அதன்படி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில், ஆட்டோக்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு வசதி செய்துள்ளனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிகரித்து வரும் கொரோனா ஓமைக்ரான் தொற்று காரணமாக பொதுமக்கள் யாரும் கட்டாய தேவை இருந்தால் அன்றி வெளியே வரவேண்டாம் என்றும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தந்து, தானும் தன்னைச் சார்ந்தவர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.