திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே, உள்ள மோளப்பாடியூரில் வேட்டை நாய்களை வைத்து சிலர் காட்டு முயல்களை வேட்டையாடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வனஅலுவலர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்து, பழனியாண்டி, மணிகண்டன், கார்த்திகேயன், சுபாஷ், மலையாளம், லோக மணிகண்டன் ஆகியோர் முயல் வேட்டையில் ஈடுபட்டது. தெரியவந்ததை தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துவுக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற 6 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா