திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர், காங்கேயன்குளம், கீழத் தெருவை சேர்ந்த மகேஷ் (43). என்பவருக்கும் வேளார்குளத்தை சேர்ந்த சுரேஷ் (28). என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்த நிலையில் (13.05.2025) அன்று மகேஷ் வெட்டுவான்குளம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சுரேஷ் அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்க முயன்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து மகேஷ் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர், சையது நிசார் அகமது வழக்கு பதிவு செய்து சுரேஷை (14.05.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்