திருநெல்வேலி : திருநெல்வேலி முக்கூடல் சடையப்பபுரத்தை சேர்ந்த அம்பிகா(39). (01.12.2024) அன்று அவருடைய வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கோவில்ராஜ் (39). என்பவர் முன்விரோதம் காரணமாக அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து அம்பிகா முக்கூடல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர், அந்தோணி சவரிமுத்து வழக்கு பதிவு செய்து, கோயில் ராஜை (02.12.2024) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்