திருநெல்வேலி: திருநெல்வேலி தேவர்குளம் வடக்கு புளியம்பட்டியை சேர்ந்த சேதுபதிக்கும், (32). வன்னிக்கோனேந்தல் பகுதியை சேர்ந்த வெனீஸ்குமார் (24). என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்த நிலையில் வெனீஸ் குமார் மற்றும் அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த வினோத் (20). மனோஜ்(19). ஆகியோர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சேதுபதியை வழிமறித்து அருவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தேவர்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் விசாரணை மேற்கொண்டு வெனீஸ் குமார், வினோத், மனோஜ் ஆகிய மூவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்