திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ராமையன்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (30). என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இசக்கிபாண்டி (22). என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு (22.09.2024) அன்று வீட்டில் இருந்த சீனிவாசனை, அங்கு வந்த இசக்கிபாண்டி அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இது குறித்து சீனிவாசன் தாயான மீனா மானூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இசக்கிபாண்டியை (23.09.2024) இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்