திருநெல்வேலி : கடந்த 2016-ம் ஆண்டு பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த பெருமாள் (41), என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் (66), செல்வராஜ் (39), லீலா (61), பிரபாகர்(40), பீலிப் (28), ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாலுகா காவல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி கூடுதல் சார்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், (11.10.2022), வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி திரு. அமிர்தவேல் அவர்கள் ராஜன், செல்வராஜ், லீலா, பிரபாகரன் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 2 ஆயிரம் அபராதமும் மற்றொரு குற்றவாளியான பீலிப்க்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த தாலுகா காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.