குமரி: குலசேகரம் வலியமலையை சேர்ந்தவர் சுரேஷ் 39 கூலி தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 4.ம்தேதி வேலைக் சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை . இது குறித்து அவரது மனைவி லீலா புகார் அளித்தார் . இந்நிலையில் வலியமலை பகுதியில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் .
வழக்கு பதிவு செய்த நிலையில் , போலீசார் மரணம் குறித்து சந்தேகம் வர குலசேகரம் இன்ஸ்பெக்டர் திரு மதி.உமா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .
விசாரணையில் சுரேசை அதே பகுதியை சேர்ந்த சிவராமன் ( 52 ) , மனோகரன் மற்றும் ஜெயபிரகாஷ் என்ற மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து முன் விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது .
பின்பு கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தார் . இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்.பி.திரு .பத்ரிநாராயணன் பாராட்டினார் .