செங்கல்பட்டு: இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை கல்லூரி முன்னாள் கல்லூரி மாணவர் சங்கத்தின் சார்பாக 2 வது பொதுக்குழுவும் மற்றும் 2025-26 காண புதிய பொறுப்பாளர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சியும் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் நமது கல்லூரி முதல்வர், முனைவர். பா. கிள்ளிவளவன் மற்றும் முன்னாள் சங்க தலைவர் T. J.ரவி ஆகியோர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. புதிய தலைவராக A.லட்சுமி, துணைத் தலைவராக Dr. வேத. அருணாச்சலம் செயலாளராக A. பாஸ்கரன், துணைச் செயலாளராக N.அன்பழகன் மற்றும் பொருளாளராக M. அசோக்குமார் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டதுடன் 17 செயற்குழு உறுப்பினர்களும் பதவி ஏற்று கொண்டார்கள். மேலும் கௌரவ உறுப்பினர்களாக லயன். ஜெ. ஜான்சன் ஆலோசகர், Advo. K. ஆறுமுகம் சட்ட ஆலோசகர், மற்றும் T. J. ரவி, மெண்டர் ஆகவும் பதவி வகிப்பார்கள் என்று அறிவிக்கபட்டது.
நிகழ்வில் மறைந்த அலுமினி உறுப்பினரான சிவனேசன் அவர்களின் திரு உருவபடம் திறந்து அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் அஞ்சலி செலுத்தபட்டது. அடுத்து,கல்லூரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் பண வெகுமதியும் வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு (2024-25) அறிக்கையை V.ஜெயலட்சுமி வாசிக்க, கணக்கு அறிக்கையை . M. அசோக்குமார் பொருளாளர் கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தார். பொதுக்கு ழுவில் வாசிக்கபட்ட 10 தீர்மானங்களும் அனைத்து பொது குழு உறுப்பினர்கலாளும் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்டது. எவர்வின் பள்ளி குழுமங்களின் தலைவரான Dr. புருஷோத்தமன் அவர்கள் முன்னாள் மாணவர் சங்க கட்டிடம் ஒன்றை தமது சொந்த செலவில் கட்டி தருவதாக சொன்ன அவரது வள்ளல் குணத்தை பாராட்டி நன்றி கூறப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக B.சகாதேவன் காவல்துறை துணை ஆணையர் (புழல் சரகம்) பி.வி. வெங்கட பெருமாள் உரிமையாளர் ஜூனியர் குப்பண்ணா, மோகன் உரிமையாளர் சூர்யா டெக்ஸ்டைல், குணசேகரன் முன்னாள் நகர மன்ற தலைவர் உத்திரமேரூர், வெங்கடேஷ் குமார் கத்தார், சம்பத் ஸ்டேட் கோச் பாஸ்கெட் பால், ராஜகோபாலன் மாரிமுத்து ஆடிட்டர் ஆகியோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். V.ஹரிதாஸ், C.வெங்கடேஷ் குமார், N.உதயகுமார், S. துரைராஜன், P. V.நந்தகுமார், விஜயபாபு மற்றும் லட்சுமி தாசா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். லயன்.ஜெ. ஜான்சன் ஆலோசகர், அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து வழி நடத்தினார். இறுதியாக .E.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூற நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது. பொது குழுவில் 200க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்