இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS, அவர்கள் (16.12.2025)-ம் தேதி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் நிலைய பதிவேடுகள், வழக்கு விசாரணை நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் புகார் மனுக்கள் கையாளும் முறை உள்ளிட்டவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலைய வளாகத்தின் சுத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
பொதுமக்களுடன் காவல்துறையினர் நல்லுறவை பேண வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துவதில் துரிதமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிக்கவும், வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
















