அரியலூர்: அரியலூர் மாவட்டம் தளவாய் காவல் நிலைய எல்லையில் வங்காரம் காப்புக்காடு அருகே வயதான முதியவரை ஒரு பெண்ணும் ஒரு ஆணும் முதியோரை மிரட்டி அவரிடம் இருந்து 6.5 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது குறித்து தளவாய் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிப்பதற்காக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஷ் வேஷ் பா சாஸ்திரி ஐ.பி.எஸ் அவர்கள் உத்தரவின் பேரில் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சாலை ராம் சக்திவேல் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு. குணசேகரன் அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் திரு ராஜவேலு அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அரியலூர் மாவட்ட ஆண்டிமடம் வட்டம் சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை @ கலையரசி மற்றும் மேலக்குடியிருப்பை சேர்ந்த நவீன் குமார் ஆகியோரை காவல்துறையினர் (26-10-2025) கைது செய்து நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர். குற்றவாளிடம் இருந்து 6.5 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
















