கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சின்ன பேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (65). இவர் இன்று மத்திகிரி காவல்நிலையம் சென்று மீண்டும் இருசக்கர வாகனத்தில் தனது பேரன் வேல்முருகனுடன் சென்றபோது கிராமத்திற்கு அருகே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூவர் முனிராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தலைமறைவாகி உள்ளனர். உடலை மீட்டு முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மத்திகிரி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்















