சென்னை : சென்னை மயிலாப்பூரில், கோவிந்தசாமி நகரில், நீதிமன்ற உத்தரவுப்படி 256 ஆக்கிரமிப்பு வீடுகளை, இடிக்கும் பணி, கடந்த 29, ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்டித்து கண்ணையா (55), என்பவர் தீக்குளித்தார். பலத்த காயமடைந்த அவரை, மீட்ட மயிலாப்பூர் காவல் துறையினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.