தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த காவல்துறையினரின் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து, தென் மண்டல ஐஜி., அன்பு நேற்று முதல் முறையாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி க. விலக்கு, அரண்மனை புதூர் விலக்கு, தேனி நேரு சிலை சந்திப்பு, பெரியகுளம், தேவதானப்பட்டி, காட்டு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி ஏடிஎஸ்பி., சங்கரன் டிஎஸ்பி., மற்றும் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.