சிவகங்கை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மாண்புமிகு தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் மரியாதைக்குரிய கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சரும் கழக இலக்கிய அணி தலைவருமான மரியாதைக்குரிய மு தென்னவன் அவர்களுடன் சேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் சாய் சுரேஷ் என்ற ராமநாதன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். இதற்கு சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு அளித்து இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















