விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரது மனைவி குணசுந்தரி (55). இவர் இன்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்ட அவரது உறவினர்கள் நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு மதியம் 1 மணிக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குணசுந்தரிக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் உயிருடன் இருந்த குணசுந்தரி மருத்துவமனைக்கு 1 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் வண்டி வர தாமதமானதால் குணசுந்தரிக்கு உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் (செப்.19) மதியம் 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.சமீப காலமாக நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்க கூட மருத்துவர்கள் கிடையாதென இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி