திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த எம்.வாடிப்பட்டி பிரிவு அருகே குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த சரக்கு வேனை நிறுத்தினர் போலீசாரை கண்டதும் சரக்கு வேனில் வந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். வேனில் வந்த மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். இதனையடுத்து சரக்கு வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக 1½ டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேன், ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா