தேனி: ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், காவல்துறை வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி துறை, இணைந்து டீக்கடைகள், உணவகங்களில், கொரோனா விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதித்து, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர் விதிகளை பின்பற்றாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் அபராதம் விதிக்கப்பட்டது.