திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஜெ.ஜெ.நகர், தெற்கு தெருவை சேர்ந்த அக்பர் அலி (20). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது குறித்து களக்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர், ஆக்னல் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வீடியோவை வெளியிட்ட அக்பர் அலியை (06.12.2024) நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப, எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்