திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் மேலக்கரை பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் கண்ணா என்பவர் தனது முகநூல் பக்கத்தில் (08.05.2025) அன்று பகல்ஹாம் தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்திகளை பதிவிட்டு உள்ளார். அப்பதிவில் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாக காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தச்சநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முருகன் கண்ணாவை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்