கோவை : கோவை அவாரம்பாளையத்தில் நேற்று முன்தினம் கொள்ளையடிக்க முயன்ற சேகர் பாபு (29) என்ற நபரை பீளமேடு கைது செய்துள்ளனர்.
ஆவாரம் பாளையத்தை சேர்ந்த 31 வயதான லிங்கம்மாள் என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டினுள் நுழைந்த கொள்ளையனை கண்ட லிங்கம்மாள் கூச்சலிட்டார். இதனைக்கண்ட கொள்ளையன் அவர் முகத்தில் மிளகாய்த்தூளை புவியை விட்டு தப்ப முயன்றான். அக்கம்பக்கத்தினர் கொள்ளையனை பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லிங்கம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பீளமேடு காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டத்தின் ஐபிசி பிரிவு 393 கொள்ளை முயற்சியில் சேகர்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்