தேனி : ஆண்டிபட்டியில் உள்ள ஜக்கம்பட்டி பகுதியில் குடியிறுப்பவர் ஜாகீர் உசேன் (55), இவர் மீன் வியாபாரம் செய்கிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடித்து, வீட்டில் தூங்கி உள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். நேற்று இரவு பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி, எரிந்தனர். இதில் பெட்ரோல் ஊற்றி எரிந்ததில் ஜாகிர் உசேன் பலத்த காயத்துடன் தேனி கவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவல் வந்ததும், ஆண்டிபட்டியில் மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்ரே, விசாரணை செய்து வருகிறார். பெட்ரோல் குண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.