திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட் (53). த/பெ ராயப்பன். நேற்று மாலை தன் மகன் போஸ்கோ என்பவருடன் பழவேற்காடு அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்று மீன்பிடி வலை நடும்போது ஏரியில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது மகன் போஸ்கோ செய்வதறியாது பக்கத்தில் இருந்தவர்களை சத்தம் போட்டு அழைத்து உள்ளார். அருகில் இருந்த மீனவர்கள் வந்து வின்சன்ட் காப்பாற்றுவதற்குள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்து அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து திருப்பாலைவனம் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு