திருவள்ளூர்: ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் வந்து கடற்கரையோரம் பெரிய படகில் பூம்புகார் மீனவர்கள் மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் படகு மீன் மற்றும் வலைகளை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடலில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியில் இருந்து 41 மீனவர்கள் பாண்டிச்சேரி வழியாக பெரிய படகில் வந்து மீன் பிடிப்பதால் அடிக்கடி தங்களின் படகுகள் மீன்வலைகள் சேதமாவதால் மீன் பிடிக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அவர்களது பெரிய லாஞ்சர் படகு மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 பைபர் படகு இரண்டு அனைத்தையும் பறிமுதல் செய்த மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என தெரிவித்து வருகின்றனர்.
41 மீனவர்களை அழைத்து வந்து காவல் துறையினர் பொன்னேரி. வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் மீன்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை மூலம் சமரசம் மேற்கண்டதைத் தொடர்ந்து பழவேற்காடு மீனவர்கள் பறிமுதல் செய்த படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் திருவெற்றியூர் துறைமுகத்தில் நிறுத்தி வைத்து இரண்டு நாட்களுக்கு பின்னர் இரு சம்மதத்திற்கு பின்னர் படகுகள் அவர்களிடம் ஒப்படைக்கவும் இனி இது போன்று பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதியில் வந்து மீன் பிடிக்க மாட்டோம் உறுதியளித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு