திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பஜார் வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன் அறிவுறுத்தல்.பின்பு கடைகளில் பயன்படுத்திய 197 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து 12000ரூபாய் அபராதம் விதித்தனர். அதைத்தொடர்ந்து டி.எச் சாலையில் முழுவதும் முககவசம் அணிய வேண்டும் என ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கிகள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு