ஆவடி காவல் சரக ஆணையகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் நடைபெற்றது.
மீஞ்சூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சுமூகமாக நடத்துவது,பொதுக்கூட்ட இடங்கள், தெருமுனை கூட்ட இடங்கள், பிரச்சார அனுமதிகள் காவல்துறை ரோந்த பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் , கம்யுனிஸ்ட், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு