திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் கார்த்திக்,முத்துலட்சுமி செல்வம்,தலைமை எழுத்தர் சர்வேஸ்வரன், மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் ரவி, அனைத்து மாற்றுத்திறனாளிகளின் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் 25 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. இதில் காவலர்கள், வழக்கறிஞர் விக்னேஷ் , மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு