திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே புழுதி பறக்கும் சாலையை கண்டித்து ரமணா நகர், மீஞ்சூர் வியாபாரிகள் மாநில பொதுச் செயலாளர் சௌந்தரராஜன் மாவட்ட தலைவர் சண்முகம் மீஞ்சூர் சேக் அகமது ரமணா நகர் தலைவர் புனித குமார் மோகன் பாண்டி கிரிராஜன் மற்றும் கம்யூனிஸ்ட் நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மழை ஓய்ந்த நிலையில் சாலையில் தூசி பறப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் மீஞ்சூர் பி.டி.ஓ அலுவலகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக சாலை அமைக்காததால் தூசி பறப்பதாகவும், வீடுகளில் உள்ள உணவு, குடிநீர் என அனைத்திலும் சாலையில் இருந்து வரும் மண் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.
மேலும் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். தார் சாலையை சீரமைப்பதாக கூறி மண் சாலையாக மாற்றி விட்டதால் புழுதி பறப்பதாக புகார் தெரிவித்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை. சந்திரசேகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 1மாத காலத்தில் சாலையை சீரமைத்து தருவதாக உறுதியளித்தார். அவருடன் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி ஆவடி சரக சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீஞ்சூர் ,புங்கமேடு, நந்தியம்பாக்கம் ,பட்டமந்தரி மேலூர் உள்ளிட்ட பகுதியில் சேர்ந்த வியாபாரிகள் இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு நன்றி தெரிவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு