திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வடகாஞ்சி என அழைக்கப்படும் காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 15-ஆம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வரும் நிலையில், 7-ஆம் நாளான இன்று திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. 4 மாட வீதிகளில் உலா வந்த தேரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இரும்பு வலையங்களால் உருவாக்கப்பட்ட வடத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கைலாச வாத்தியங்கள் முழங்கியும், திருவாசகம் உள்ளிட்ட சிவ புராணங்களை பாராயணம் செய்தும், தேரை வடம் பிடித்து “ஓம் நமச்சிவாய”, “ஹர ஹர மகாதேவா” என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு