திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கல்பாக்கம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் நரிக்குறவர் இன மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு காவல்துறை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அரிசி, காய்கறி, பால், ரொட்டி, போர்வை ஆகியவற்றை காவல்துறையினர் வழங்கினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு